நம் அன்றாடைய வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களை சந்திக்கிறோம். அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ சாந்தியையோ தருவதில்லை.
கடைக்கரைக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். கடல் அலைகள் ஆரபாரித்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். இவ்வாறேதான் நம் மனமும் அல்லும் பகலும் இடைவிடாது எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
எண்ணங்களால் நாம் என் துன்பப்பட வேண்டும்? எண்ணங்களின் தாக்கம் நம்மை செயல் செய்ய தூண்டுவதால்தான். செயல்களில் சில நன்மை பயக்கின்றன; சில தீமை பயக்கின்றன. புத்தியினால்தான் நன்மை தீமை தன்மையயை நம்மால் அறிய முடியும். எண்ணத்தை செயல்படுத்தும் முன் அதன் விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்காமல் செய்யும் எந்தச் செயலும் இடர்பாடு தரும்.
நாம் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. மக்கள் கூட்டத்தில் சட்ட திட்டங்களை அனுசரிக்கும் நாகரிகமானவர்கள். பலனை எண்ணி நாம் செயல்களை செய்கிறோம். அச்செயல் நமக்கு அன்றி மற்றவர்களுக்கும் ஊரு விளைவிக்காததாக இருக்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக் கூடாது. இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். நல்லது கெட்டத்தை எவ்வாறு அறிவது? அதற்கு நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.
மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன் விளைவுகளை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன எண்ணினாலும், மற்றும் செய்ய நினைத்தாலும், ஒரு குரல் சரி, தவறு என்று கூறுகிறது. அக்குரலே மனசாட்சி.ஒருவருக்கு தீங்கு செய்ய நாம் எண்ணும்போது மனசாட்சி அது தவறு என்றுரைக்கும். அதை அலட்சியம் செய்து தீச்செயலை நாம் செய்தால் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டி வரும்.
நம்மில் பலர் மனதை அடக்க முடிவதில்லை, அது தறிக்கெட்டு ஓடுகிறது , என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையை பழக்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் அது யாரையும் அதன் அருகில் வரவோ ஏறவோ அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி உதைக்கும். அதைப் பழக்குபவர் மெல்ல மெல்ல அதன் தேவைகளைக் கவனிக்கத் தொடங்குவார். உணவு கொடுப்பது, லாயத்தை சுத்தம் செய்வது, அனைத்து பணிகளையும் அவரே செய்வார். குதிரை சிறிது சிறிதாக அவர் வசம் வரும். பிறகுதான் அதன் மேல் ஏறுவது, ஓட்டப் பயிற்ச்சி அளிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவார். மனமும் குதிரையைப் போன்றதே. அதை அடக்கப் பயிற்சித் தேவை.
நாம் பழகும் மனிதரின் சொல்லும் செயலும், நம் மனதை பாதிக்கின்றன. அவை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர வெளிஉலக நிகழ்வுகளும் நம் மனதை உலுக்குகின்றன. இவற்றால் நம்முள் எண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட மனம் மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு நாம் தீர்வு காண விழைகிறோம். நம்மால் செயல்புரிய முடியும் விஷயங்களுக்கு தீர்வு காணலாம். வெளியுலக நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. 'மனசாந்திக்கு என்ன வழி?' என்பதுதான் நம் பிரச்சனை.
மனம் எப்போது அமைதியடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம் அமைதியடையும். ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகள் குறைந்தால்தான் ஆசைகள் குறையும். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குகிறோம். விலைமிகுந்த தேவையற்ற படோடபமான ஆடைகளை வாங்குகிறோம். பல ஆடைகளை பிறகு அணியாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறோம். ஒரு தீபாவளிக்கு சாதாரண ஆடைகளை வாங்கி மிச்சப்படும் பணத்தில் ஏழைகளுக்கு நாம் துணி வாங்கித் தரலாமே?
உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை மற்றும் படோடபமின்மையை அனுசரித்தால் கண்டிப்பாக ஆசைகள் குறையும். வாழ்வின் குறிக்கோள் ஆசைகளை நிறைவேற்றுவது என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் அதன் வழிமுறை தெரியவரும்.
மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில் மதித் தோன்றிடும். மதி என்பதை ஞானம் எனக் கொள்ளலாம். ஞானம் என்பது அறிவின் முதிர்ந்த நிலை. வாழ்வின் உண்மையை உணரும் நிலை அது. மதி தோன்றியதும் நம் பிறவிப் பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். பிறவிப் பயன் "நான் யார்?" என்பதை அறிவதுதான். ஞானத்தால்தான் அதை அறிய முடியும். 'நான்' என்பது இவ்வுடல் அல்ல; மனம், புத்தி, மற்றும் பஞ்சக் கரணங்கள் அல்ல. அது அனைத்துக்கும் வேறுபட்ட ஆத்மனே ஆகும். அந்த உண்மையை புத்தியினால் அறிய முடியாது. பல வருட சாதனைச் செய்து மனதை அடக்கி முடிவில்தான் அதை அடையலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக